சத்துணவு ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி


சத்துணவு ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
x
தினத்தந்தி 22 Sept 2023 1:30 AM IST (Updated: 22 Sept 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டியில் சத்துணவு ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. 20-ந்தேதி தொடங்கிய பயிற்சியில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடக்க நிகழ்ச்சிக்கு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளையராஜா தலைமை தாங்கி பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இளநிலை உதவியாளர் சிவகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் சட்டநாதன், உதவி மருத்துவ அலுவலர் சதீஷ்குமார், ஊட்டச்சத்து நிபுணர் மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியில் உணவு பாதுகாப்பு, முதல் உதவி, சிறுதானியங்களின் முக்கியத்துவம், யோகா, தகவல்தொடர்பு ஆகியவை குறித்து விளக்கி கூறப்பட்டது. இதேேபால் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம் (சத்துணவு), பச்சைமுத்து (பொது) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கவிச்சக்கரவர்த்தி கலந்துகொண்டு சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.


Related Tags :
Next Story