செங்கோட்டை நகராட்சி கூட்டம்
செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
தி.மு.க. கவுன்சிலா் ரஹீம் பேசுகையில், "இதுவரையில் எனது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை. அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
இதனையடுத்து அ.தி.மு.க. உறுப்பினா் ஜெகன் பேசுகையில், எனது வார்டிலும் சாலை வசதி, கழிவுநீர் ஓடை, சீரான குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை. எனவே அடுத்து நடக்க இருக்கிற கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்க இருக்கிறோம்" என்றார். இதேபோல் கவுன்சிலர்கள் சுப்பிரமணி, சுடர்ஒளி, வேம்புராஜ், செண்பகராஜன், இசக்கித்துரை பாண்டியன் மற்றும் ஏனைய உறுப்பினா்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினா்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனா்.