ஆம்னி வேனில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்


ஆம்னி வேனில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி  பறிமுதல்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் வழியாக பெங்களூருக்கு ஆம்னி வேனில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 2 பேர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி-தேன்கனிக்கோட்டை சாலையில் முதுகானப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட மொத்தம் 21 பைகளில் மொத்தம் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் முதுகானப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓசூர் மத்திகிரி முதுகானப்பள்ளி பர்ஷானா தாஜ் (வயது 29) மற்றும் மத்திகிரி சிப்பாய்பள்ளத்தை சேர்ந்த டிரைவர் சையத் ஜபீர் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் ஆம்னி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story