வேனில் கடத்த முயன்ற 23 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


வேனில் கடத்த முயன்ற 23 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஒகேனக்கல் வழியாக பெங்களூருவுக்கு வேனில் கடத்த முயன்ற 23 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரி

தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, செந்தில்குமார், ராமச்சந்திரன், வேணுகோபால், குமார் மற்றும் போலீசார் ஒகேனக்கல்-ஆலம்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கே.குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43) என்பதும், பென்னாகரத்தை சேர்ந்த வள்ளுவன் (63) என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பெங்களூருக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான வள்ளுவனை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story