வால்பாறை பகுதியில் மழை: சோலையாறு அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது


வால்பாறை பகுதியில் மழை: சோலையாறு அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது
x

வால்பாறையில் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி வருகிறது.

விட்டுவிட்டு மழை

வால்பாறை பகுதியை பொறுத்தவரை மே மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடைமழை தொடங்கி அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை தொடங்கியதால் மே மாதத்திலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டேயிருந்தது.

மேலும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தொடங்காமல் வெப்பம் சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக வால்பாறை பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

சோலையாறு அணை

இந்த மழை காரணமாக பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையான 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதியில் ஆங்காங்கே அருவிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் தொடர்ந்து சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

90 அடியை நெருங்கியது

அணைக்கு 458.80 கன அடி நீர்வந்தது. தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

தற்போது பெய்து வரும் மழை கேரள மாநிலத்திலும் தொடர்ந்து பெய்து வருகிறது. ஆண்டு தோறும் கேரளாவில் இருந்து தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இப்போது பெய்து கொண்டிருக்கும் மழை தென்மேற்கு பருவமழையாக இன்னும் ஒரிரு நாளில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story