தென்காசியில் பரவலாக மழை
தென்காசி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. தென்காசியில் மாலையில் தூறல் விழுந்தது. ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மழை பெய்தது. சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், குருக்கள்பட்டி, நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதியம் 2 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது. 3 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire