குமரியில் மழை நீடிப்பு


குமரியில் மழை நீடிப்பு
x

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், பெருஞ்சாணி அணை 71 அடியை கடந்ததால், பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், பெருஞ்சாணி அணை 71 அடியை கடந்ததால், பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்த நிலையில் உள்ளன.

அதைத்தொடர்ந்து அந்த அணைகளின் உபரிநீர் பாயும் கோதையாறு மற்றும் குழித்துறை தாமிரபரணியாற்றுக் கரையோர மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணை

இந்த நிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் நேற்று காலையில் வெள்ள அபாய அளவான 71 அடியைக் கடந்தது. அதைத்தொடர்ந்து இந்த அணையிலிருந்து உபரிநீர் பாயும் பரளியாறு மற்றும் குழித்துறை தாமிரபரணியாற்று கரையோரப் பகுதி மக்களுக்கு பொ துப்பணித்துறையினரால் நேற்று பிற்பகலில் இரு ந்து வெள் ள அபா ய எச்சரிக்கை விடப்பட்டது. பெரு ஞ்சாணி அ ணையின் நீர்மட்டம் நேற்று மாலையில் 71.70 அடியாக இருந்தது. அ ணைக் கு வினாடிக்கு 854 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 45.06 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 46 அடியை எட்டினால், அணையிலிருந்து உபரிநீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Next Story