மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; மடக்கிய காளையர்கள்
மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளை காளையர்கள் மடக்கி பிடித்து தங்கள் வீரத்தை காட்டினார்கள்.
மேலூர்
மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளை காளையர்கள் மடக்கி பிடித்து தங்கள் வீரத்தை காட்டினார்கள்.
மஞ்சுவிரட்டு
மேலூர் அருகே உரங்கான்பட்டி பகுதியில் உள்ள அய்யமுத்தான்பட்டியில் மந்தைக்கருப்பணசாமி கோவில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மேலூர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் இருந்தும், சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை, காடாம்பட்டி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட கோவில் மாடுகளும், வளர்ப்பு காளை மாடுகளும் வாகனங்களில் கொண்டுவரப்பட்டன.
கிராம பாரம்பரிய வழக்கப்படி கோவில் மாடுகளுக்கு மாலை மற்றும் துண்டுகள் அணிவித்து மரியாதை வழங்கப்பட்டன. பின்னர் அங்குள்ள கண்மாயில் மாடுகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை பிடித்த காளையர்கள்
சீறி பாய்ந்து வந்த காளை மாடுகளை வாலிபர்கள் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தினர். மாடுகள் முட்டி சிலர் காயமடைந்தனர். ஏராளமானோர் வாகனங்களில் மேல் நின்று மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.