வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
அலங்காநல்லூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
வடமாடு மஞ்சுவிரட்டு விழா
அலங்காநல்லூர் அருகே சின்ன ஊர்சேரி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 25 நிமிட இடைவெளியில் தலா 9 வீரர்கள் வீதம் களமிறங்கினர்.
போட்டியில் பிடிபடாத காளைகளுக்கு ரூ.25 ஆயிரம், மற்றும் பீரோ, சைக்கிள், பித்தளை அண்டா, குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.
பரிசுகள்
இதேபோல் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை சுற்றுவட்டார கிராம மக்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர். முன்னதாக இந்த விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. கட்சி நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர், பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை சதீஷ்குமார் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.