குன்னத்திக்காட்டு அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
பொன்னமராவதி அருகே குன்னத்திக்காட்டு அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே பிரசித்தி பெற்ற செம்பூதி குன்னத்திக்காட்டு அய்யனார், நல்ல அய்யனார், வீரமலை அம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாத புரவி எடுப்பு திருவிழாவையொட்டி பிடி மண் கொடுக்கப்பட்டு குதிரைகள், மதிலை சிலைகள் செய்யப்பட்டு ஊர் மந்தையில் வைத்து மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்த பின்னர் ஊரின் எல்லைப்பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அய்யனார் கோவிலுக்கு தோளில் சுமந்தவாறு எடுத்துச்சென்று அங்கு வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்வாறு செய்வதின் மூலமாக மழை பெய்யும், விவசாயம் சிறப்பாக நடைபெறும், தொழில் முன்னேற்றம் பெருகும், ஊர் ஒற்றுமை பெருகும் என்பதனை ஐதீகமாக கொண்டு பல தலைமுறைகளாக தொன்று தொட்டு இந்த வழிபாட்டு முறையை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.