புரட்டாசி மகாளய அமாவாசை: மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலா...!


புரட்டாசி மகாளய அமாவாசை: மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலா...!
x

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையிலிருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது. இந்த 6 நாட்கள் சுற்றுலா செப்டம்பர் மாதம் 24-ம் தேதி அன்று மதுரையில் இருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயண காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 39,300 கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 8287931977 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். http://www.irctctourism.com என்ற இணையதளம் மூலமும் பயண சீட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம் என சுற்றுலா கழகம் தெரிவித்துள்ளது.


Next Story