புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில்  ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x

புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

கால்நடை சந்தை

புஞ்சைபுளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த சந்தையில் தமிழக அரசின் சார்பில் வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆடுகள் வாங்கப்பட்டது.

ரூ.50 லட்சம்

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு எடைக்கு ஏற்ப அதனுடைய விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த வாரம் 10 கிலோ வரையிலான வெள்ளாடு ரூ.6 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று நடந்த சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story