வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்


வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
x

வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல்

வடமதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் இன்று நடைபெற்றது. அப்போது சுந்தரேசுவரருக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் மற்றும் பன்னீர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து 108 சங்குகள், தாமரை மலர்கள், வாழை மற்றும் எலுமிச்சை பழங்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் வடமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story