இலவச மனைப்பட்டா கேட்டுவிருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


இலவச மனைப்பட்டா கேட்டுவிருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலவச மனைப்பட்டா கேட்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். நெய்வேலி சேப்பளாநத்தம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விருத்தாசலம் தாலுகா அலுவலகம் வரை ஊா்வலமாக சென்றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு வட்ட செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். வட்ட துணை தலைவர் வீரமணி, மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் மேரி, விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணன், வட்ட பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் அன்புச்செல்வி, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயமணி, மாவட்ட துணை செயலாளர் மணி ஆகியோர் கலந்து கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தாசில்தார் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். பின்னர், அவர்கள் தாசில்தாரிடம் மனுக்களை அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story