போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வார புதன்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாத 2-வது வார புதன்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றார். இதில், பணமோசடி, கடனுக்கு அதிக வட்டி வசூலிப்பு, நிலத்தகராறு உள்பட 15-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவற்றின் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணவும், அதுகுறித்து மனுதாரர்களுக்கு தகவல் கூறும்படி அறிவுறுத்தப்பட்டது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story