காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தபட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணிதுறை, சுகதாரத்துறை, சமூகநலத்துறை, கால்நடைத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை கூட்டத்தில் வழங்கினார்கள். அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மனுக்கள் பெற்ற கலெக்டர்
இக்கூட்டத்திற்கு மனு அளிக்க வருகை புரிந்த மாற்றுதிறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்ற கலெக்டர், அவர்களிடம் மனுக்கள் பெற்று உரிய அலுவலர்களிடம் கொடுத்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் 204 மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.