கலெக்டர் தலைமையில் நடந்தபொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன


கலெக்டர் தலைமையில் நடந்தபொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 314 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக கலெக்டர் ஷ்ரவன் குமார் மாற்றுத்திறனாளிகள் 19 பேரிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதையடுத்து 333 மனுக்களை தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது சுரேஷ், சமூக பாதுகாப்பாளர் ராஜலட்சுமி, தனித்துணை ஆட்சியர் ராஜவேல், வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, துணை இயக்குனர் சுந்தரம், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story