சாமியார் உருவப்பொம்மையை எரித்து போராட்டம்
தேனியில் சாமியார் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்துக்கு எதிராக பேசியதாக, அவரது தலைக்கு ரூ.10 கோடி தரப்படும் என்று உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் அறிவித்தார். அந்த சாமியாரை கண்டித்து தேனி பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மாரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள், சாமியாரின் உருவப்பொம்மையை எரித்து, காலில் போட்டு மிதித்தனர். உடனே போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவப்பொம்மை மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story