பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குளச்சல் பணிமனை முன் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குளச்சல்,
போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில் டிரைவர்கள் நியமனம், தனியார் பஸ்களை ஒப்பந்த முறையில் அனுமதிப்பது, தடங்களை நீட்டிப்பு செய்து ஓய்வு, உணவு இடைவெளி இல்லாமல் 18 மணி நேரத்திற்கு மேல் பணி செய்ய நிர்பந்திப்பது, உதிரிபாகங்கள் வழங்காமல் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு தண்டனை அளிப்பது ஆகியவற்றை கண்டித்தும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க கேட்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் எல்.டி.ரவி தலைமை தாங்கினார். செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பத்மநாபன், கிளை செயலாளர்கள் கிருஷ்ணகுமார், சாமி ஆசாரி, சங்க அலுவலக செயலாளர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் கிரீஷ், சங்க செயற்குழு உறுப்பினர் சிவகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.