மங்களபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மங்களபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் வீடுகளுக்கு முன்பு சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி தரக்கோரியும் மங்களபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முகாம் செயலாளர் காளிதாஸ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அரசன், ராசிபுரம் தொகுதி செயலாளர் செங்கோட்டுவேல், துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட துணை அமைப்பாளர் செல்வ நிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கபிலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட நிர்வாகிகள் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story