ரூ.60 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.60 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மதகொண்டப்பள்ளி, சாத்தனூர் ஊராட்சிகளில் ரூ.60 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதகொண்டப்பள்ளி மற்றும் சாத்தனூர் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்ெகாள்ளப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் விமல், உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், செல்வம், பின்னமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் பிரசாந்த், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story