மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் திட்டம்


மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் திட்டம்
x

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் திட்டத்தை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

விருதுநகர்,

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் திட்டத்தை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

மேம்படுத்தும் திட்டம்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு ரீடிங் மாரத்தான் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்தும் திட்டத்தினை கலெக்டர் மேகநாதரெட்டி சூலக்கரை மற்றும் விருதுநகர் அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் என்ற வாசிப்பு இயக்கம் வருகிற 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கூகுள் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வாசிப்பு மாரத்தான் நடத்தப்படுகிறது.

வாசிப்பு திறன்

அதன்படி அனைத்து இல்லம் தேடி கல்வி மையங்களிலும் தன்னார்வலர்களின் மூலம் செல்போன் வழியாக கூகுள் செயலியை பயன்படுத்தி மாணவர்கள் படிக்கும் வகையில் இந்த வாசிப்பு மாரத்தான் திட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் இல்லம்தேடிகல்வித்திட்டத்தின் கீழ் 3,597 மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த மையங்களில் பயிலும் மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்த தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக இந்த பயிற்சி நடைபெறும்.

பயிற்சி கையேடு

எனவே மாணவ,மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாசிப்புத்திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கான பயிற்சி கையேடு, கற்றல் அட்டைகள், புத்தகம் ஆகியவற்றை இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, உதவித்திட்ட அலுவலர் சிவசக்தி கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story