கடையில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு


கடையில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு
x

சாத்தூர் அருகே பட்டாசு கடையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே பட்டாசு கடையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின்பேரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்கள் பற்றி கண்காணிக்க சாத்தூர் நகர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாத்தூர்-சிவகாசி மெயின் ரோட்டில் கோணம்பட்டி விலக்கு அருகில் பட்டாசு விற்பனைக்காக அனுமதி பெறப்பட்ட பட்டாசு விற்பனை கடையில் வேலை செய்துகொண்டே பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 2 பேர் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

2 பேர் கைது

இதில் பேன்சி ரக பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தபொழுது அதற்குப்பயன்படுத்திய 3 கிலோ எடையுள்ள அலுமினியம் பவுடர் பை ஒன்று, 25 கிலோ எடையுள்ள கரிதூசி அடங்கிய ஒரு மூடை மற்றும் 25 கிலோ எடை உள்ள மஞ்சள் காவி பவுடர் அடங்கிய ஒரு மூடை, தராசு, படிக்கல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மாரியப்பன் (வயது25) கார்த்திக்ராஜா (28) ஆகிய இருவரையும் சாத்தூர் நகர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story