கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே சித்தூரில் 19-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை கல்லம்பட்டி அணியினரும், இரண்டாம் பரிசை சித்தூர் அணியினரும், மூன்றாம் பரிசை அரசந்தம்பட்டி அணியினரும், நான்காம் பரிசை தாழம்பட்டி அணியினரும் பெற்றனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை சித்தூர் மற்றும் அரசமலை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.


Next Story