15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைநாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைநாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Sept 2023 12:30 AM IST (Updated: 28 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்

15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பாலியல் தொல்லை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை காந்தி நகரை சேர்ந்தவர் சின்னுசாமி. இவருடைய மகன் முருகன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி 15 வயது சிறுமியை கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயபாரதி வாதாடினார். வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் நீதிபதி முனுசாமி குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து முருகனுக்கு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story