தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
பரமத்திவேலூர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கபிலர்மலை வட்டார கிளையின் சார்பில் பொத்தனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கண்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பி.எட். மாணவர்களை கொண்டு மதிப்பீடு செய்யும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மதிப்பீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும். மேலும் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதை விரிவு படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் வட்டார பொருளார் ஜோதி நன்றி கூறினார்.