டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை


டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
x

கீழக்கொளத்தூர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அரியலூர்

திருமானூர் வட்டாரத்தில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜிதா ஆணைப்படி கீழக்கொளத்தூர் கிராமத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவ அலுவலர் பிர்தௌஸ்பானு ஆகியோர் மேற்பார்வையில் மருத்துவ முகாம் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும், கிராம சுகாதார செவிலியர்கள் காய்ச்சல் கண்டோர் மற்றும் கர்ப்பிணிகள் கணக்கெடுப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

இதையடுத்து நடைபெற்ற மருத்துவ முகாமில் 7 கர்ப்பிணிகள் உள்பட 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 234 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ரத்த மாதிரிகள் மற்றும் 3 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத்துறை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கிராமம் முழுவதும் சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்கள் மூலம் கொசுக்கள் உற்பத்தியிடங்களை அழித்திட டயர்கள் மற்றும் உடைந்த பாட்டில்களை அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், கொசுக்களை அழிக்க புகை மருந்து அடிக்கப்பட்டது.


Next Story