கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:30 AM IST (Updated: 15 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு

கூட்டுறவு சங்கத்தின் ஈரோடு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள 233 விற்பனையாளர்கள், 10 கட்டுனர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் www.drberd.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் www.drberd.in என்ற இணையதளத்தில் உள்ள HOW TO APPLY ONLINE என்ற பட்டனை அழுத்தி, அதன் தொடர்ச்சியாக வரும் பி.டி.எப். கோப்பினையும், யூடியூப் தளத்தில் TN COOP DEPT என்ற சேனல் பக்கத்தில் உள்ள (https://www.youtube.com/watch?v=G6c5e2ELJD8) காணொலியின் வாயிலாகவும் வழங்கப்பட்டுள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட வசதிகளை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story