இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சேலம்

சேலம்,

வேம்படிதாளம்

வேம்படிதாளம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தப்பக்குட்டை, தாடிகாரனூர், அய்யனூர், முத்துகுட்டியூர், ஈஸ்வரன் கோவில், கோழிபுதூர், சின்ன மாரியம்மன்கோவில், கோனேரிப்பட்டி, இடங்கணசாலை, வாழக்குட்டை, மடத்தூர், மாட்டையாம்பட்டி, ஈ.காட்டூர், தீர்த்தான்வளவு, வளையசெட்டியூர், தூதனூர், சிட்டனூர், மெய்யனூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

உடையாப்பட்டி

உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளன. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அயோத்தியாப்பட்டணம், அரூர் மெயின் ரோடு, ஆசிரியர் காலனி, மாசிநாயக்கன்பட்டி, இ.பி.அலுவலகம், தேவாங்கர் காலனி ஒரு பகுதி, பாலாஜி காலனி, ஜே.ஜே. காலனி, முட்டை கடை, மேட்டுப்பட்டி, தாதனூர், பேளூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சங்ககிரி

சங்ககிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளன. எனவே இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, சங்ககிரி மேற்கு, படைவீடு, பச்சாம்பாளையம், சன்னியாசிபட்டி, வெப்படை, அம்மன் கோவில், மக்ரிபாளையம், முதலமடையானூர், திருநகர் பைபாஸ் சிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கே.ஆர்.தோப்பூர்

கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையம் மற்றும் மாரமங்கலத்துப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, பாகல்பட்டி 22 கிலோ மின்னூட்டிகளில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளன. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாப்பாடி, காரைசாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண் கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகு சமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி, தோலூர், இரும்பாலை, மோகன் நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாளை

சிங்கபுரம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளன. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்குராஜபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், பவளத்தானூர், சந்திரபிள்ளைவலசு, நடுப்பட்டி, மத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

வேப்பிலைப்பட்டி

மேட்டுப்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வேப்பிலைப்பட்டி மின்பாதையில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், வேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம், வெள்ளாளகுண்டம், திருமனூர், முடியனூர், கந்தபிள்ளையார் கோவில், கொமாரபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கூட்டாத்துப்பட்டி

மின்னாம்பள்ளி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கூட்டாத்துப்பட்டி மற்றும் விளாம்பட்டி மின்பாதைகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனேவ நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரவிராஜன், சரவணன், பாரதி, வரதராஜன், சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story