சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


சேலம் மாவட்டத்தில்  இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சேலம்

சேலம்,

தும்பல்

தும்பல் துணைமின் நிலையத்தில் இன்று(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே இன்று காலை9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டு புதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரப்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாளை

சேலம் புத்திரகவுண்டம்பாளையம், கருப்பூர் துணை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, புத்திரகவுண்டம்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்தியகவுண்டம்புதூர், பெரியகிருஷ்ணாபுரம், முத்தாணூர், படையாச்சியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தட்டாஞ்சாவடி, கோரிமேடு, வெள்ளாளப்பட்டி, சின்ன வெள்ளாளப்பட்டி, கோபிநாதபுரம், சக்கர செட்டிப்பட்டி, கவுல்காடு, என்.எஸ்.தோட்டம், வட்டக்காடு, மத்தாளிக் காட்டுபள்ளம், முள்ளுசெட்டிப்பட்டி, கு.குட்டப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, காந்திநகர், தாழம்பூ ஓடை, உடைந்த பாலம், சீனிவாசாநகர், பனங்காடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

ஏற்காடு

இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்துக்குட்பட்ட ஏற்காடு மின்பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்றத்துமேடு, செட்டிச்சாவடி, கருங்காலி, குருவம்பட்டி மற்றும் ஏற்காடு பகுதிகளில் மின்சார வினிேயாகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பாரதி, ராஜவேலு, சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story