தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
எடமணல் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அதிகாரிகள் கவனிப்பார்களா? என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
சீர்காழி அருகே எட மணல்கிராமத்தில் திருநகரி செல்லும் சாலையில் அருகில் வயல்வெளி பகுதிகளில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான செல்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கம்பிகள் பழுதடைந்துள்ளது. இந்த மின் கம்பிகள் கீழே அறுந்து விழும் நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் வயலில் நடந்து சென்றால் மின் கம்பிகள் தலையில் உரசும் நிலையில் உள்ளது. எனவே சீர்காழி மின்சாரத்துறை அதிகாரிகள் அதை கவனித்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். மேலும்இடையூறாக வயல்களில் உள்ள மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story