தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்


தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
x
தினத்தந்தி 17 July 2023 12:45 AM IST (Updated: 17 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமம் உள்ளது. இ்ங்கு மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. சாலை ஓரத்தில் உள்ள தென்னை, வேம்பு உள்ளிட்ட மரங்கள் மீது மின்கம்பிகள் உரசியபடி செல்கின்றன.

இந்த பகுதி வழியாக செல்லும் சாலையில் லாரி போன்ற கனரக வாகனங்கள் அடிக்கடி பயணிப்பது வழக்கம். அவ்வாறு செல்லும்போது சில நேரங்களில் வாகனங்கள் மீது மின்கம்பிகள் உரசுவதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கிராம மக்கள் கோரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்ற லாரிகள் வரும்போது தாழ்வாக தொங்கி கொண்டிருக்கின்ற மின் கம்பிகளை யாராவது ஒருவர் நீண்ட கம்பின் உதவியுடன் உயர்த்தி பிடித்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இல்லையென்றால் மின்கம்பிகள் லாரிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இவ்வாறு தாழ்வாக மின்கம்பிகள் செல்வதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆபத்தான நிலையில் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின் கம்பிகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story