இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
சேலம் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம்,
கம்மாளப்பட்டி
சேலம் மாவட்டம் மல்லூர் துணைமின் நிலையத்தில் பனமரத்துப்பட்டி மின்பாதையில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி திப்பம்பட்டி, கோனமடுவு, குரல்நத்தல், தும்பல்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, அடிமலைப்பட்டி, வேடப்பட்டி, நூல்ஆத்துகோம்பை, குள்ளப்பநாயக்கனூர், நல்லியம்புதூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புளியம்பட்டி
இதேபோல், வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் காந்தி நகர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கத்தாளபேட்டை, அம்மன் கோவில், பாட்டப்பன் கோவில், புளியம்பட்டி, சுப்பிரமணியர் கோவில், காந்தி நகர், ஏழுமாத்தானூர், ஆலங்காட்டனூர், வேலகவுண்டம்பாளையம், நடுவனேரி, ராஜமாணிக்கம் தோட்டம் மற்றும் ராமாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வாணியம்பாடி
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் வாணியம்பாடி மின்பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மின்னக்கல், வாய்கால்பட்டறை, வடுகம்பாளையம், அம்மன் கோவில், தங்கசாலை, புதுப்பாளையம், பைரோஜி, வாணியம்பாடி, அரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதேபோல் மல்லூர் துணை மின் நிலையத்தில் அலவாய்பட்டி மின்பாதையில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் பொன்பாரப்பட்டி, ஏ.ஜி.பாளையம், வெள்ளைபிள்ளையார் கோவில், நரிக்கல்காடு, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், வெட்டுக்காடு, செம்மாண்டப்பட்டி, கட்டிபாளையம் மற்றும் கல்கட்டானூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.