கோழி கழிவுகள் தீவைத்து எரிப்பு
மூலைக்கரைப்பட்டி அருகே கோழி கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டது.
திருநெல்வேலி
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சரகம் பரப்பாடி அருகே சீயோன்மலை கிராமம் நம்பியாறு கல்லான் ஓடை பகுதி உள்ளது. இங்கு நாகர்கோவில் இரணியலை சேர்ந்த ராஜாக்கண்ணு (வயது 40) என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கோழி கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் சீயோன்மலை ஊர் பொதுமக்கள் அந்த பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும், நோய்த்தொற்று ஏற்படுவதாகவும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு மேலும் கோழி கழிவுகளை எரிக்கக்கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தி, எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story