பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை


பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 3 July 2023 12:30 AM IST (Updated: 3 July 2023 12:56 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் கிராமம் மயிலை மலை பாலமுருகன் கோவிலில் உள்ள அமிர்தேஸ்வரர் உடனமர் அமிர்தாம்பிகை கோவிலில் கணபதி, முருகன், சண்டிகேஸ்வரர், பரிவார தெய்வங்கள், காலபைரவர் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை, யாகம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழா கடந்த 30-ந் தேதி கணபதி பூஜை, கங்கணம் கட்டுதல், ஆசீர்வாத பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 8 மணிக்கு கணபதி பூஜை, புண்ணியாஜனம், ருத்ரம், சமகம் புருஷ சுக்தம், நாராயண சுக்தம், ஸ்ரீ சுக்தம் சூர்க்கா சுகிதம், ஈஸ்வரன் 1108 சகஸ்ர நாமம், 108 வில்வ ஹோமம், பரிவார தெய்வங்கள் பூஜை, கால பைரவர் பூஜை, வேதபாராயணம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, பசு மாடு தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மயிலை மலையை சுற்றி கிரிவலம் சென்று அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகையை வழிபட்டனர்.


Next Story