தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்


தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
x

திருப்பனந்தாள் அருேக தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருகே குறிச்சியில் மத்திய ஒன்றியம் சார்பில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் கோ.க அண்ணாதுரை, முன்னால் எம்.எல்.ஏ கல்யாணம், ஒன்றிய செயலாளர்கள் உதயசந்திரன், மிசா மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பேசுகையில், அனைத்துத் துறை வளர்ச்சி என்ற நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார குறியீடுகளை கொண்டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாக கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே நமது அரசின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளராக உதயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் அறிவித்த கழக தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது, இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை மீண்டும் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவிப்பது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நசீர்அகமது, பேரூராட்சி செயலாளர்கள் கோசி. இளங்கோவன், சப்பானி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story