தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
கும்பகோணத்தில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
கும்பகோணம்;
கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நசீர்அகமது தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமை கொறடா கோவிசெழியன், அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்யாணசுந்தரம் எம்.பி. பேசினார். அப்போது அவர், வருகிற பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க.வினர் கடுமையாக உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும். உட்கட்சிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2 மாதத்துக்கு ஒரு முறையாவது கூட்டங்கள் நடத்த வேண்டும் என கூறினார். கூட்டத்தில் 2-வது முறையாக கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு, ஜெயலட்சுமி, மாவட்ட பொருளாளர் நடராஜன், மாநகர செயலாளர் தமிழழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.