அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

களக்காட்டில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

களக்காடு:

நாங்குநேரி சுங்கச்சாவடியில், சுற்று வட்டாரத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உள்ளூர் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிக்க கோரியும், சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்தும் களக்காட்டில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது காஸிர், மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ஈழவளவன், ஒன்றிய செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகாராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக், மனித உரிமை காக்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் தூர்க்கைலிங்கம், பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன், இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தென் மண்டல செயலாளர் மங்கள்ராஜ் பாண்டியன்,

காங்கிரஸ் வட்டார தலைவர் பிராங்கிளின், நகராட்சி கவுன்சிலர் சிம்சோன் துரை, மக்கள் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கபிலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வின், நான்குநேரி வளர்ச்சி கமிட்டி பொறுப்பாளர் ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு உறுப்பினர் முகமது ரபீக், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பீமாஸ் உசேன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் புரட்சி பாரதம் கட்சி இளைஞரணி அமைப்பாளர் முத்து பாஸ்கர் நன்றி கூறினார்.


Next Story