அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லையில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ்
சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், உதயகுமார், கவி பாண்டியன், மகளிர் அணி அனிஸ் பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா
பாரதீய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.மா.கா
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜெகநாதராஜா, வர்த்தக அணி சக்சஸ் புன்னகை, வீரவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் பிரபு ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க -தே.மு.தி.க
ம.தி.மு.க சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில மகளிரணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பா, மாநகர செயலாளர் துரை பாண்டியன், இளைஞர் அணி செயலாளர்கள் முத்துப்பாண்டி, கிங் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மத்திய, மாநில எஸ்.சி-எஸ்.டி ஊழியர் சங்க நிர்வாகி சுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் தங்கவேல், டி.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது அவர்கள் சமூக நல்லிணக்க உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர். நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் மதுபால் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செலாளர் ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் மாநில நிர்வாகி ரமேஷ் தலைமையிலும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் லெனின் தலைமையிலும், ஆதித்தமிழர் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது. அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் பத்மநாபன், நெல்லை மாவட்ட தலைவர் முத்துகுமார், அமைப்பு செயலாளர் நடராஜன், மாநகர மாவட்ட தலைவர் சுசீந்திரமோகன், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்து மக்கள் கட்சி தென் மண்டல செயலாளர் ராஜபாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.