சூறைக்காற்றால் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்திய போலீசார்
சூறைக்காற்றால் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்திய போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை பெய்யும் போது சூறைக்காற்று வீசியது. அப்போது பாடாலூர்-ஊட்டத்தூர் பிரிவு சாலையின் ஓரத்தில் இருந்த மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை தலைமையிலான போலீசார் உடனடியாக பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் வாகனங்கள் சாலையில் சென்றன. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் விரைந்து செயல்பட்ட மேற்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story