நெல் கொள்முதல் மையங்களில் போலீசார் ஆய்வு
பெரியகுளம் அருகே நெல் கொள்முதல் மையங்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.
தேனி
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் மையங்களில் முறைகேடு நடப்பதாக புகார் வந்ததன்பேரில், உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மையங்களில் நெல் வரத்து, எடை அளவு முறைகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் விவசாயிகளிடம் கொள்முதல் மையங்களின் செயல்பாடுகளைக் குறித்து கேட்டறிந்தார். ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால் உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story