போக்சோ கைதி திடீர் சாவு


போக்சோ கைதி திடீர் சாவு
x
தினத்தந்தி 9 March 2023 12:15 AM IST (Updated: 9 March 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

போக்சோ கைதி திடீர் சாவு

கோயம்புத்தூர்

கோவை

கோவை அருகே உள்ள தடாகம் வரப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 67). இவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் அவர் காச நோயால் அவதிப்பட்டு வந்தார். இதன்காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து சிறை டாக்டர்களின் பரிந்துரையின் பேரில், கடந்த 4-ந் தேதி பழனிசாமி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story