முகநூல் மூலம் பழகி 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
முகநூல் மூலம் பழகி 17 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி
முகநூல் மூலம் பழகி 17 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
சிறுமி
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை அடுத்த செம்பகவுண்டன் வலசு இடைக்காட்டு காலனியை சேர்ந்தவர் தமிழரசு (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். தமிழரசுவுக்கும், ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சிறுமி ஆயுத பூஜை அன்று தன்னுடைய பெற்றோரிடம் சிவகிரியில் உள்ள தான் வேலை பார்க்கும் இடத்தில் பூஜை நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ள செல்வதாகவும் கூறிவிட்டு் வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
போக்சோவில் கைது
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். விசாரணையில் சிறுமியை தமிழரசு கடத்தி சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கொடுமுடி பஸ் நிலையத்தில் சிறுமியுடன் தமிழரசு நிற்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் தமிழரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பின்னர் அவர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.