மொடக்குறிச்சி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ேசாவில் கைது
மொடக்குறிச்சி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
மாணவி
மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 17 வயது பெண். கல்லூரி மாணவியான இவர் ஆன்லைனில் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கும், 18 வயது வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 17-ந் தேதி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர்.
போக்சோவில் கைது
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வாலிபர் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story