'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது


இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது
x

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழகி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ஈரோடு

பெருந்துறை

'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பிளஸ்-2 மாணவி

பெருந்துறை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பள்ளிக்கூடத்துக்கு சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் பல இடங்களிலும் அவரை தேடி பார்த்தனர். அவர்களால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் மாணவியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர்.

'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி...

இந்த நிலையில் அந்த மாணவி வாலிபர் ஒருவருடன், பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவி மற்றும் அவருடன் இருந்த வாலிபரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் சேலம் மாவட்டம் கெங்கவள்ளி அருகே உள்ள உதயத்தூரை சேர்ந்த ரங்கநாதன் (வயது 26). பெயிண்டரான இவர் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பெருந்துறை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியிடம் பழகியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த மாணவிக்கு காதல் வலை வீசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

கைது

இதையடுத்து கடந்த 5-ந் தேதி பெருந்துறை பகுதிக்கு வந்த அவர் அந்த மாணவியை கடத்தி சென்று கெங்கவள்ளி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் மருத்துவ பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story