பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
கொம்பேறிபட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்
வடமதுரை அருகே கொம்பேறிபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வயநமசி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், சுற்றுப்புற சூழல் மாற்றங்கள், திடக்கழிவு மேலாண்மை, தனிநபர் கழிப்பறைகளை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற செயலாளர் பரமேஸ்வரன், துணைத்தலைவர் கருப்பையா, உடற்கல்வி ஆசிரியர் ஜான்பிரிட்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story