குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

வடக்கு பூதலூர் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

வடக்கு பூதலூர் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய் உடைப்பு

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய ஊர்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்காக விஷ்ணம்பேட்டை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து ராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் மேல ஏற்றப்பட்டு இரும்பு குழாய்கள் தரைக்கு அடியில் புதைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் குடிநீர் வடக்கு பூதலூர் பகுதியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது.

நடவடிக்கை

தொடர்ந்து பல நாட்களாக இந்த பகுதியில் தண்ணீர் கசிந்து தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர் கேட்டை உருவாக்கியிருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசும் நிலையும் உருவாகியுள்ளது. சாலையோரத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் எதிர் எதிரே இரண்டு வாகனங்கள் வரும் பொழுது தண்ணீர் செல்பவர்கள் மீது வாரி இறைக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.இந்த இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்த பகுதியில் உள்ள மக்கள் கூறுகிறார்கள். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அதிகாரிகள் தகுந்த நடவடிக்க எடுத்துஉடைப்பை அடைத்து குடிநீரை பாதுகாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story