தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த புகைப்பட கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான, இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் உள்பட பல்வேறு திட்டங்கள தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் அமைச்சர் காந்தி மற்றும் பிற துறை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.


Next Story