2 இடங்களில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்க கிராம மக்கள் மனு


2 இடங்களில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்க கிராம மக்கள் மனு
x

வந்தவாசி அருகே சென்னவரம் கிராமத்தில் 2 இடங்களில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கக்கோரி ஜமாபந்தியில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை


வந்தவாசி

வந்தவாசி அருகே சென்னவரம் கிராமத்தில் 2 இடங்களில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கக்கோரி ஜமாபந்தியில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊராட்சி தலைவர் வீரராகவன் தலைமையில் தாசில்தார் முருகானந்தத்திடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், சென்னாவரம் ஊராட்சிக்கு உள்பட்ட கோபாலகிருஷ்ணன் தெரு, சாரதி தெரு, ராமசாமி தெரு, அன்னை சத்யா நகர், காந்தி நகர், மாணக்ராஜ் தெரு, சின்னதம்பி தெரு, மேல்மருவத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளிலிருந்து சென்னாவரம் சுடுகாட்டுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதிகளுக்கென ஒரு சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும்.

மேலும் சென்னாவரம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆர் நகர் காலனி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கென தனியாக ஒரு சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும். இரு சுடுகாடுகளுக்கும் இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாடுகளுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.


Next Story