சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை


சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை
x

காட்டம்பட்டி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு ஒன்றியம் காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன் பூமி பூஜை செய்து சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் சின்னசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் பெஞ்சமின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story